சுங்கை பட்டாணி:
அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக, இந்திய நாட்டவர் ஒருவருக்கு எதிராக சுங்கை பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
38 வயதுடைய வெல்டிங் பணியாளரான முகமட் ஹசீன் என்பவருக்கு எதிராக, நீதிபதி நபிஷா இப்ராஹிம் முன்னிலையில் ஆஜராக்கப்பட்டார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டு இந்தியில் மொழியில் வாசிக்கப்பட்டது.
நவம்பர் 13ஆம் தேதி மாலை சுமார் 6.45 மணியளவில், பெடோங் பகுதியில் உள்ள ஜாலான் செமெலிங்கில் அமைந்த ஒரு தொழிற்சாலையின் அலுவலகத்தில், Sig Sauer ரக கருப்பு நிற கைத்துப்பாக்கி ஒன்றை அனுமதியின்றி வைத்திருந்ததாக அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, 1971ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆறு பிரம்படிப் பட்டைகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று நீதிமன்ற வாதங்களில் குறிப்பிடப்பட்டது.
மேலும் விசாரணைகளுக்காக இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு வழக்கு முன்னெடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.