Offline
Menu
இனரீதியான 1,583 உள்ளடக்கங்களை நீக்குமாறு சமூக ஊடக சேவை வழங்குநர்களுக்கு MCMC கோரிக்கை
By Administrator
Published on 12/05/2025 09:00
News

கோலாலம்பூர்:

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 30 வரை இனரீதியான கூறுகளைக் கொண்ட ஆன்லைன் உள்ளடக்கங்களை நீக்குவதற்காக மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) மொத்தம் 1,583 கோரிக்கைகளை சமூக ஊடக சேவை வழங்குநர்களுக்கு சமர்ப்பித்துள்ளது.

அதில் 1,066 பதிவுகள், அதாவது 67%, சமூக ஊடக தளங்களால் அவர்களின் சொந்த சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் மலேசியாவின் பொருந்தக்கூடிய சட்டங்களின் அடிப்படையில் அகற்றப்பட்டன என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ’ ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்தார்.

“MCMC மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டம் 588 இன் விதிகளின்படி அதன் பொறுப்புகளை நிறைவேற்றுகின்றன.

“இவை வெறுப்பு அல்லது வன்மத்தை தூண்டும் முயற்சிகளிலிருந்து நாட்டின் அரசியலமைப்பு அரசாட்சியும் ஜனநாயக நிறுவனங்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும், மேலும் தவறான தகவல் அல்லது வெறுப்புப் பேச்சு பரவுதலை கட்டுப்படுத்தும்.

“பொது நலனை கருத்தில் கொண்டு, தனிநபர் உரிமைகளுக்கும் சமூக நலனுக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவதே இதன் நோக்கம்,” என்று நேற்று அவர் வி. கணபதிராவ் (PH–கிள்ளான்) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்ததார்.

Comments