மலேசிய சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தின் (சுற்றுலா மலேசியா) தலைவராக டத்தோ மனோகரன் பெரியசாமி டிசம்பர் 8 முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. டத்தோ டாக்டர் யாஸ்மின் மஹ்மூத் பதவியேற்றதை அடுத்து, வரவிருக்கும் 2026 மலேசியா வருகை (VM2026) பிரச்சாரத்திற்கான விளம்பர நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில், வாரியத்தின் தகவல் தொடர்பினை வழிநடத்தும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
மனோகரன் பொது சேவை மற்றும் சுற்றுலாத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். முன்பு மலேசிய சுற்றுலாவின் தலைமை இயக்குநர் பணியாற்றியுள்ளதோடு, அனைத்துலக ஊக்குவிப்பு, விளம்பரம், டிஜிட்டல், தொகுப்பு மேம்பாடு, கார்ப்பரேட் தகவல்தொடர்புகளில் மூத்த பதவிகளை வகித்துள்ளார்.
2000 முதல் 2016 வரை இந்தியா உட்பட தெற்காசியாவில் மலேசியாவின் சுற்றுலா ஊக்குவிப்பு முயற்சிகளுக்கும் அவர் தலைமை தாங்கினார். இந்த நியமனத்தின் மூலம் என் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். மலேசியாவின் முதன்மையான சுற்றுலாத் தலமாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்த நிர்வாகம், அனைத்து சுற்றுலா மலேசியா பணியாளர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன் என்று மனோகரன் கூறினார்.