பினாங்கு செபராங் ஜெயாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு அறையில் தனது மனைவியை வெட்டிக் கொன்று உடலை நான்கு நாட்கள் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒரு நபர் சரணடைந்துள்ளார். கோஸ்மோவின் கூற்றுப்படி, 28 வயதான வேலையில்லாத நபர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரணடைவதற்கு முன்பு தனது மனைவியின் உடலுடன் தங்கியிருந்தார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற ஒரு போலீஸ் குழு, கூர்மையான ஆயுதத்தால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் கழுத்தில் காயங்களுடன் 44 வயதான மாதுவின் சடலத்தை மீட்டது. முன் குற்றப் பதிவு உள்ளதாகக் கூறப்படும் சந்தேக நபரும் விசாரணைக்கு உதவ சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஐந்து குழந்தைகளுக்கு தாயான விதவையான கொலையுண்டவரை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சந்தேக நபரை மணந்ததாக மலாய் மொழி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பினாங்கு காவல்துறைத் தலைவர் அஸிசி இஸ்மாயில் சம்பவத்தை உறுதிப்படுத்தி, இந்த வழக்கு ஒரு கொலையாக விசாரிக்கப்படுவதாகக் கூறினார்.