Offline
Menu
ஃபாஹ்மி ஃபாட்சிலுக்கு “டத்தோ படுக்கா மக்கோத்தா சிலாங்கூர்” விருது வழங்கி கெளரவிப்பு
By Administrator
Published on 12/12/2025 09:00
News

கோலாலம்பூர்:

தொடர்புத்துறை அமைச்சரும், அரசாங்கப் பேச்சாளருமான டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சிலுக்கு டத்தோ அந்தஸ்தைக் குறிக்கும் டத்தோ படுக்கா மாஹ்கோத்தா சிலாங்கூர் எனும் உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் 80 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இங்குள்ள ஸ்ரீ இஸ்தானா அலம் ஷாவில் நடைபெற்ற விழாவில், விருதுப் பெற்ற 98 நபர்களில் அமைச்சரும் ஒருவராவார்.

ஃபாஹ்மியைத் தவிர சிலாங்கூர் கிராமப்புற மேம்பாடு, ஒற்றுமை நுகர்வோர் விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயிலும் இவ்விருதை பெற்றார்.

மேலும் மொத்தம் 16 பேருக்கு DPMS எனும் டத்தோ விருது வழங்கப்பட்டது.

Comments