Offline
Menu
ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்தா? அபிஷேக் பச்சன் பதிலடி
By Administrator
Published on 12/14/2025 17:06
Entertainment

நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். சில ஆண்டுகளாக அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் திருமண வாழ்க்கையில் பிரச்னை இருப்பதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன் “நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த பிறகு, எப்போது விவாகரத்து செய்வோம் என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள். இது முட்டாள்தனமானது. எங்கள் இருவருக்​கும் உண்மை என்னவென்று தெரி​யும். நாங்​கள் மகிழ்ச்​சி​யாக, ஆரோக்​கியமாக இருக்​கிறோம். அதனால் இது​போன்ற வதந்​தி​கள் எங்களைப் பாதிப்​ப​தில்​லை. அதேநேரம் என்​னை​யும் என் குடும்​பம் பற்​றி​யும் பொய்​யான, முட்​டாள்​தனமான விஷ​யங்​களைப் பேசுவதைப் பொறுத்​துக்​கொள்ள முடி​யாது” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

Comments