Offline
Menu
நடிகர் சிவகார்த்திகேயன் வந்த கார், மற்றொரு கார் மீது மோதி விபத்து
By Administrator
Published on 12/24/2025 08:30
Entertainment

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், ‘பராசக்தி’. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

சிவகார்த்திகேயன் வந்த கார், முன்னால் சென்ற கார் மீது லேசாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து தொடர்பாக இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீசார் சமரசம் பேசி உள்ளனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments