சென்னை,கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உபேந்திரா. இவர் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த ரஜினியின் ’கூலி’ படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால், அவரது கதாபாத்திரத்திற்கு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், அவர் நடித்துள்ள ‘45 தி மூவி’ படத்தின் புரமோஷனில் இது பற்றி அவர் ஓபனாக பேசினார். அவர் பேசுகையில், ’நான் அதை ரஜினிகாந்த் சாருக்காக மட்டும்தான் செய்தேன். நான் அவருடைய தீவிர ரசிகன். ஆரம்பத்தில் எனக்கு ஒரே ஒரு சண்டைக் காட்சிதான் இருந்தது, பிறகு எனக்காக அந்தக் கதாபாத்திரம் மேம்படுத்தப்பட்டது. அது ஒரே ஒரு காட்சியாக இருந்தாலும் கூட நான் நடித்திருப்பேன்’என்றார்.