Offline
Menu
தமிழ் சீரியல் நடிகை தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி
By Administrator
Published on 12/31/2025 15:09
Entertainment

பெங்களூரு,தமிழில் தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் கவுரி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை நந்தினி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் கன்னட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், பெங்களூருவில் வசித்து வந்த நந்தினி இன்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, தற்கொலை செய்வதற்குமுன் நந்தினி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் திருமணம் செய்துகொள்ளுமாறு பெற்றோர் வற்புத்தி வந்ததாகவும், தான் திருமணத்திற்கு தயாரக இல்லை என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும், மன ரீதியில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் சீரியல் நடிகை நந்தினி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்கள் , சின்னத்திரையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments