Table tennis வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் எட்டாத ஒரு புதிய உச்சத்தை, இலங்கையின் 10 வயது சிறுவன் தாவீ சமரவீர எட்டியுள்ளார். 11 வயதுக்குட்பட்டோருக்கான table tennis தரவரிசையில்முதலிடத்தைப் பிடித்து தாவீ சமரவீர சரித்திரம் படைத்துள்ளார்! இது இலங்கை வீரர் ஒருவர் எந்த வயதிலும் இதுவரை பெற்றிராத மிக உயர்ந்த உலகத் தரவரிசையாகும்.
து சிறு வயதிலிருந்தே table tennis மீது அபார ஆர்வம் கொண்டிருந்தார். தினமும் பல மணிநேரம் கடினமாக பயிற்சி செய்து, தனது திறமைகளை மெருகூட்டி வருகிறார். மேலும் இவர் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பல வெற்றிகளை குவித்துள்ளார். ஆசிய அளவிலான பல போட்டிகளிலும் அவர் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று, தனது திறமையை நிரூபித்துள்ளார்.
“ஒலிம்பிக்கில் இலங்கைக்கு ஒரு பதக்கத்தை வெல்வதே எனது கனவு,” என்று தாவி சமரவீர உறுதியுடன் கூறுகிறார். அவரது இந்த வெற்றி, இளம் இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டலாக அமைந்துள்ளது.
தாவியின் இந்த உலக சாதனைக்கு இலங்கை முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுவினர் தாவிக்கு வாழ்த்து தெரிவித்தனர், சமூக வலைத்தளங்களில் வருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.