Offline
Menu
‘எனக்கு உங்கள் மகள் வயது…’ – அநாகரீகமாக நடந்து கொண்டவருக்கு மேடையில் இருந்தே பதிலடி கொடுத்த பாடகி
By Administrator
Published on 01/03/2026 00:43
Entertainment

சண்டிகர்,அரியானா மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகி பிரன்ஜால் தஹியா. இவர் அரியான்வி மொழியில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இவரது இசைக் கச்சேரிகளுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பிரன்ஜால் தஹியா பங்கேற்ற ஒரு இசை நிகழ்ச்சியில், ஒரு சிலரின் அநாகரீக செயல்களுக்கு மேடையில் இருந்தவாறே பிரன்ஜால் பதிலடி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சின்போது ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த சில நபர்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாகவும், சிலர் மேடையில் ஏற முயன்றதாகவும் கூறப்படுகிறது.

மேடையில் பாட்டு பாடிக்கொண்டிருந்த பிரன்ஜால், இத்தகைய செயல்பாடுகளைக் கண்டு பாடலை இடையிலேயே நிறுத்தினார். அப்போது பேசிய அவர், “உங்கள் மகளோ, சகோதரியோ இங்கு நின்று கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். எனவே ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்” என்றார்.

மேலும் கூட்டத்தில் இருந்த ஒரு நபரை குறிப்பிட்டு காட்டி, “எனக்கு உங்கள் மகள் வயது இருக்கும். தயது செய்து கட்டுப்பாடாக இருங்கள்” என்று காட்டமாக கூறினார். அதோடு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவதற்கு ரசிகர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பாடகியின் துணிச்சலான செயலுக்கு இணையவாசிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Comments