Offline
Menu
கோல்டன் குளோப் விருது வென்ற நடிகையை சந்தித்த நதியா
By Administrator
Published on 01/04/2026 14:57
Entertainment

மலையாளத்தில் நடித்துவந்த நடிகை நதியா தமிழில் ‘பூவே பூச்சூடவா’ என்ற படத்தில் அறிமுகமானார். தமிழ், மலையாள திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நதியா திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் குடியேறினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பி குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் படத்தில் அவருக்கு அம்மாவாக தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு தாமிரபரணி, சண்டை, பட்டாளம், உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

கடந்த சில வாரங்களாகவே ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் நதியா. நேற்று புத்தாண்டை முன்னிட்டு அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு சென்ற போது அங்கே எதிர்பாராத விதமாக வருகை தந்த தனது பேவரைட் ஆஸ்திரேலியா நடிகையான நிக்கோல் கிட்மேனை சந்தித்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். நிக்கோல் மேரி கிட்மேன் ஆறு கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகையை சந்தித்தது குறித்து நதியா தனது இன்ஸ்டா பக்கத்தில் “ரசிகைக்காக தருணம்! நிக்கோல் மேரி கிட்மேனைச் சந்திக்க ஓடினேன். ஆஸ்திரேலியாவில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை அவர். மிகவும் அன்பான, அழகான அவரைச் சந்தித்தது ஒரு விருந்துதான். என்னுடைய உயரத்திற்கு ஏற்றவாறு அவர் வளைந்து கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை மறக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.

Comments