Offline
Menu
சுயமரியாதையை மட்டும் இழக்காதீர்கள் – நடிகர் ரவி மோகன்
By Administrator
Published on 01/06/2026 09:05
Entertainment

சென்னை,சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 10-ந் தேதி ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. முதல் பாடலான ‘அடி அலையே’ , 2வது பாடலான ‘ரத்னமாலா’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நேற்று நடைபெற்றது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு அனுபவங்களை பகிர்ந்தனர்.

அப்போது பேசிய நடிகர் ரவி மோகன், “பராசக்தி திரைப்படத்தில் நான் நடித்ததற்கு 2 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலில் இது சுயமரியாதையைப் பேசும் திரைப்படம். என் சொந்த வாழ்க்கையிலிருந்து சுயமரியாதை எவ்வளவு முக்கியம் எனக் கற்றுக்கொண்டேன். நீங்கள் யாரும் உங்கள் சுயமரியாதையை மட்டும் இழக்க வேண்டாம். இன்னொரு காரணம் இயக்குநர் சுதா கொங்கரா. இப்படம் பலரின் கடுமையான உழைப்பால் தங்கம் போல உருவாகியிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Comments