தமிழ்த் திரையுலகின் பல்திறமைக் கலைஞரும், சமூக சிந்தனை கொண்ட படைப்பாளியுமான நடிகர், இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எளிய கதைக்களம், குடும்ப உணர்வுகள் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கியவர். நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் என பல பரிமாணங்களில் சாதனை புரிந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கே.பாக்யராஜ் அவர்களுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!