இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'புறநானூறு' படத்தின் படப்பிடிப்பு இன்று காலை மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் சூர்யா ஒரு கல்லூரி மாணவராகவும், போராட்ட வீரராகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படம், சமூகக் கருத்துள்ள ஒரு கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.