கோலாலம்பூர், பிப்ரவரி 15, 2026:
நாடு முழுவதும் காசநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பொது விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 2,571பேருக்கு காச நோய் பாதிப்பு இனங்காணப்பட்டுள்ளது. இதில் சபா (Sabah)வில் 614 பேரும், சிலாங்கூரில் (Selangor): 476 பேரும், சரவாக்கில் (Sarawak): 257 பேரும், ஜோகூரில் (Johor): 233 பேரும், கோலாலம்பூர் & புத்ராஜெயா ஆகிய கூட்டாட்சி பிரதேசங்களில் : 202 பெரும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதர மாநிலங்களான பினாங்கு (148), கெடா (144) மற்றும் பேராக் (127) ஆகியவையும் குறிப்பிடத்தக்க பாதிப்புகளைக் கொண்டுள்ளன. மற்ற மாநிலங்களில் பாதிப்பு 100-க்கும் குறைவாகவே உள்ளது.
பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது:
தொடர் இருமல் (நீண்ட நாட்களாக இருக்கும் இருமல்)
காய்ச்சல்
பசியின்மை
திடீர் உடல் எடை குறைவு
எனவே கூட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவது சிறந்தது என்றும்,
இருமல் உள்ளவர்கள் இருமும் போதும் அல்லது தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்வது போன்ற முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் தொற்று நோய்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பாகும்.
காசநோய் என்பது சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் குணப்படுத்தக்கூடிய நோயாகும். எனவே அறிகுறிகள் உள்ளவர்கள் தயக்கமின்றி பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.