Offline
Menu
வங்கதேசத்தில் புதிய அரசு: தாரிக் ரஹ்மான் இன்று பிரதமராகப் பதவியேற்பு
By Administrator
Published on 02/17/2026 13:45
News

வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) இன்று புதிய அரசை அமைக்கிறது. இன்று காலை 10 மணிக்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, மதிய வேளையில் பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்கிறார். இதற்காக "அரசியலமைப்பு சீர்திருத்த ஆணையம்" என்ற புதிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்தில் மீண்டும் ஒரு பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், தாரிக் ரஹ்மானின் தலைமையிலான அரசு இந்தியாவுடன் தனது உறவை எப்படித் தொடரும் என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. வங்கதேசத்தின் புதிய பிரதமர் இந்தியாவுடன் வளர்ச்சித் திட்டங்களில் தீவிரமாகச் செயல்படுவார் என்று பிஎன்பி பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் கவலைகளைப் போக்கும் வகையில் பேசியுள்ளார்.

Comments