ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள 'துரந்தர் 2' (Dhurandhar 2) திரைப்படத்தை இயக்குநர் ராம்கோபால் வர்மா வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஒரு "ஆஸ்ட்ராய்டு" (Asteroid) போல வந்து, பழைய காலத்து "டைனோசர்" பாணி மசாலா படங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கியுள்ள இந்த உளவுத் துறை த்ரில்லர் படம் இன்னும் மூன்று வாரங்களில் வெளியாகவுள்ளது. பாலிவுட்டின் வழக்கமான ஃபார்முலாக்களை உடைக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளதாக ராம்கோபால் வர்மா புகழ்ந்து தள்ளியிருப்பது சினிமா பிரியர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.