Offline
Menu
பேஸ்புக், இன்ஸ்டாவில் இனி பேக் ஐடி ஓபன் பண்ண முடியாது.. செக் வைக்க மத்திய அரசு பரிசீலனை
By Administrator
Published on 03/28/2026 09:00
News

புதுடெல்லி,பேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பயனர்கள், தங்கள் மின்னஞ்சல், மொபைல் எண் கொடுத்து இந்த சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். சமூக வலைத்தளங்களில் போலியாக கணக்கு தொடங்கி மோசடி செயல்களில் ஈடுபடும் நிகழ்வுகளும் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, இனி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (X) மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளக் கணக்குகளைத் தொடங்க ‘கேஒய்சி’ (KYC – Know Your Customer) சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், வங்கி கணக்கு தொடங்குவது அல்லது சிம் கார்டு வாங்குவது போலவே, உங்கள் அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பித்த பின்னரே சமூக வலைதளக் கணக்குகளைப் தொடங்க முடியும். இது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிகிறது. அதேவேளையில் பயனர்களின் தனிப்பட்ட உரிமையை மீறும் விதமாக இந்த நடவடிக்கை அமையும் என்று எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

Comments