Offline
Menu
விஜய் சொன்ன வார்த்தை.. போன் போட்டு நன்றி சொன்ன நடிகர் சத்யராஜ்!
By Administrator
Published on 03/30/2026 12:00
Entertainment

நடிகர் விஜய் மற்றும் சத்யராஜ் இருவரும் தற்போது அரசியலில் எதிரெதிர் காட்சிகளில் இருக்கிறார்கள். திமுக ஆதரவாக இருக்கும் சத்யராஜ் நடிகர் விஜய்யையும் விமர்சிப்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதே கட்சியில் இருக்கும் சத்யராஜின் மகளும் தொடர்ந்து விஜய்யை தாக்கி பேசி வருகிறார்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை பற்றி சத்யராஜ் பேசி இருக்கிறார்.

போன் போட்டு நன்றி சொன்னேன்

"நான் ஹீரோவாக தொடர்த்து பயங்கர பிளாப் கொடுத்து சரிவை சந்தித்து வந்த நேரம் அது. அப்போது விஜய், அஜித், சூர்யா போன்றவர்கள் வளர்ந்து வந்தார்கள்."

அப்போது ஒரு வார இதழில் விஜய்யை பேட்டி எடுத்து இருந்தார்கள். நடிக்க வருவதற்கு உங்களுக்கு யார் inspiration என கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் 'எனக்கு எந்த டயலாக் கொடுத்தாலும் அதை சத்யராஜ் சார் எப்படி பேசுவார் என நினைத்து பார்ப்பேன்' என கூறியுள்ளார். மேலும் அமைதிப்படை படத்தில் சத்யராஜ் நடித்த அமாவாசை போன்ற ஒரு ரோலில் நடிக்க வேண்டும் என ஆசை என கூறினாராம்.

"நான் இறக்கத்தில் இருந்த நேரத்தில் அப்படி அவர் பேசியதற்கு நான் போன் செய்து நன்றி கூறினேன்" என சத்யராஜ் கூறியுள்ளார். 

Comments