Offline
Menu
அருள்நிதியின் “டிமான்ட்டி காலனி 3” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
By Administrator
Published on 04/05/2026 18:55
Entertainment

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

அஜய் ஞானமுத்து இயக்கிய ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Comments