Offline
Menu
அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலை திறப்பு
By Administrator
Published on 04/13/2026 14:00
News

வாஷிங்டன்,அமெரிக்கா – சியாட்டில் மாநகரின் மையப் பகுதியான புகழ்பெற்ற வெஸ்ட்லேக் சதுக்கத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் பரிசாக வழங்கிய இச்சிலையை சியாட்டில் மேயர் கேட்டி வில்சன் திறந்து வைத்தார். அமெரிக்காவில் ஒரு மாநகர அரசால் விவேகானந்தர் சிலை நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தச் சிலை அமைந்துள்ள வெஸ்ட்லேக் சதுக்கம் மிகவும் புகழ்பெற்ற இடமாகும். இது நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் மக்கள் வந்து செல்லும் பகுதியாகும். அமேசான் தலைமையகம் (The Spheres), சியாட்டில் மாநாட்டு மையம் மற்றும் மோனோரயில் நிலையம் போன்ற முக்கிய இடங்களுக்கு மிக அருகில் இந்த சிலை அமைந்துள்ளது. இதன் மூலம், மாதந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தரின் திருவுருவத்தைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுவாமி விவேகானந்தரின் இந்த அற்புதச் சிலையை இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பி நரேஷ் குமார் குமாவத் செதுக்கியுள்ளார். இவர் இதுவரை 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் 600-க்கும் மேற்பட்ட சிலைகளை நிறுவி, இந்தியக் கலையைப் உலகெங்கும் கொண்டு சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments