Offline
Menu
மலேசியா-தாய்லாந்து எல்லையில் புதிய முறையில் எரிபொருள் கடத்தல்
By Administrator
Published on 04/14/2026 15:00
News

மலேசியா-தாய்லாந்து எல்லையில் மானியம் வழங்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலை முறைகேடாகக் கடத்துபவர்கள் தற்போது புதிய உத்தியைக் கையாளுவதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். பெரிய டேங்கர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சாதாரண வாகனங்களின் எரிபொருள் தொட்டிகளை நிரப்பிக் கொண்டு ஒரு நாளைக்கு பலமுறை எல்லை தாண்டிச் சென்று எரிபொருளைக் கடத்துகின்றனர் (Repeated trip). அங்கு எரிபொருளை விற்றுவிட்டு, காலியான தொட்டியுடன் மீண்டும் மலேசியா வந்து இந்தப் பணியைத் தொடர்கின்றனர்.

வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் கடத்தல்காரர்கள் இந்த ரகசிய முறையைப் பின்பற்றுவதாக கெடா மாநிலப் காவல்துறைத் தலைவர் கம்மியூனர் அட்லி அபு ஷா உறுதிப்படுத்தியுள்ளார். இதைத் தடுக்க குடிவரவுத் துறையுடன் இணைந்து தேவையற்ற முறையில் அடிக்கடி எல்லை தாண்டும் வாகனங்களைக் கண்காணிக்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

இத்தகைய கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் தாய்லாந்து செல்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மானிய வளங்கள் கசிவதைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை தற்போது எல்லையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Comments