கோலாலம்பூர், ஜாலான் கெந்திங் கிள்ளான் பகுதியில் மதுபோதையில் காரைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய 42 வயது பெண்ணுக்கு, கோலாலம்பூர் போக்குவரத்து நீதிமன்றம் ஒரு நாள் சிறைத்தண்டனையும் 13,000 ரிங்கிட் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.
கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில், 22 வயது இளைஞர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவருக்குக் காயம் ஏற்பட்டது; சோதனையில் அந்தப் பெண்ணின் இரத்தத்தில் மதுவின் அளவு 183 மில்லிகிராம் என்ற மிக அதிக அளவில் பதிவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதச் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும், அவரின் ஓட்டுநர் உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் கோலாலம்பூர் போக்குவரத்துப் புலனாய்வு, அமலாக்கப்பிரிவுத் தலைவர் ஏ.சி.பி முகமட் ஸம்சூரி தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடரும் வேளையில், விபத்தைக் கண்ட சாட்சிகள் துன் எச்.எஸ். லீ போக்குவரத்துப் போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு மேலதிகத் தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.