Offline
Menu

LATEST NEWS

விஜய் அண்ணா பாணியில் அரசியல் புரட்சி.. 60 ஆண்டுக்கு பின் அதே பராபவ ஆண்டில் நடந்த அதிசயம் Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/cm-vijay-replays-1967-history
By Administrator
Published on 05/11/2026 13:00
News

சென்னை: 1967ம் ஆண்டு மார்ச் மாதம் அண்ணாதுரை தமிழக முதல்வராக பதவியேற்ற அதே பராபவ தமிழ் வருடத்தில் விஜய் முதல்வராக மே மாதத்தில் பதவியேற்றுள்ளார். அதாவது பராபவ ஆண்டின் இறுதியில் அண்ணா பதவியேற்றார். திராவிட ஆட்சி ஆரம்பம் ஆனது பராபவ ஆண்டின் இறுதியில் தான். ஆனால் திராவிட ஆட்சி சரியாக 60 ஆண்டுகள் கழித்து அதேபராபவ ஆண்டில் மாறி உள்ளது. திராவிட கட்சிகள் இல்லாமல் ஒரு அரசு அமைந்துள்ளது என்று ஆன்மீக பெரியவர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தவெக தலைவர் விஜய் இன்று தமிழ்நாட்டின் 18வது முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீக், காங்கிரஸ் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்துள்ளது. விஜய் முதல்வராக பதவியேற்று உள்ளதை விஜய் ரசிகர்கள், தவெக நிர்வாகிகள் கொண்டாடுகிறார்கள். விஜய் பதவியேற்ற இன்றைய நாள் அன்னையர் தினம் என்றும், அவரது அம்மாவிற்கு மிகச்சிறந்த பரிசு விஜய் வழங்கிவிட்டதாகவும் தவெகவினர் நெகிழ்கிறார்கள்.

மறுபுறம் அண்ணா பதவியேற்ற அதே பராபவ தமிழ் வருடத்தில் விஜய் முதல்வராக பதவியேற்று உள்ளதாகவும், 60 ஆண்டுகளுக்குப் பின் 'பராபவ' ஆண்டில் பெரிய அரசியல் புரட்சி நடந்தள்ளதாகம் கொண்டாடுகிறார்கள் தவெகவினர். தமிழக அரசியல் வரலாற்றில் 1967-ம் ஆண்டு என்பது ஒரு சகாப்தத்தின் முடிவாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி அன்று தான் முடிவுக்கு வந்தது. அதாவது டெல்லியில் உள்ள தேசிய கட்சி தமிழ்நாட்டை ஆண்டது அதுதான் கடைசி.. 60 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா ஏற்படுத்திய அரசியல் மாற்றம் சரியாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்று 2026-லும் அரங்கேறி இருப்பதை வரலாற்று ஆய்வாளர்களும் ஆன்மீகப் பெரியோர்களும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

1967-
ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி, அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றார். அப்போது நிலவிய தமிழ் ஆண்டு 'பராபவ' (60 ஆண்டு சுழற்சியில் 40-வது ஆண்டு). 1967 மார்ச் என்பது பராபவ ஆண்டின் இறுதிக்காலமாகும். அன்று காங்கிரஸ் கட்சியில் நிலவிய அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை வீழ்த்தி, ஒரு புதிய அரசியல் மாற்றத்தை பேரறிஞர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

Comments