Offline
Menu
ஆர்த்தி ரவி குறித்து அவதூறு பேச தடை, கெனிஷாவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
By Administrator
Published on 05/15/2026 18:00
Entertainment

சென்னை, நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி குறித்து அவதூறு கருத்துகளைப் பேச பாடகி கெனிஷா பிரான்சிஸுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

ரவி மோகனின் தோழி கெனிஷா பிரான்சிஸ். இவர் ஆர்த்தி ரவி குறித்து அவதூறு கருத்துகளை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கெனிஷா தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவதாக சென்னை ஐகோர்ட்டில் ஆர்த்தி ரவி மனு தாக்கல் செய்தார். மேலும், இது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில், இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வழக்கு தொடர்பாக இறுதி தீர்ப்பு வரும் வரை அவதூறு அல்லது தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எந்த ஊடகத்திலும் ஆர்த்தி ரவிக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது என்று கெனிஷாவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments