Offline
Menu

LATEST NEWS

ராக்கெட் வேகத்தில் உயரும் எரிபொருள் விலை: நாளை முதல் புதிய மாற்றம்!
By Administrator
Published on 05/21/2026 12:00
News

கோலாலம்பூர்:

​உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை மாற்றங்களின் அடிப்படையில், மலேசியாவில் நாளை முதல் ரோன்97, மானியமில்லா ரோன்95 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

ரோன்97 பெட்ரோல் லிட்டருக்கு 15 சென் உயர்ந்து, புதிய விலை RM 4.85 ஆக விற்பனை செய்யப்படும்.

​மானியமில்லா ரோன்95 பெட்ரோல் லிட்டருக்கு 20 சென் உயர்ந்து, புதிய விலை RM 4.07 ஆக விற்பனையாகும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் உலகளாவிய கச்சாய் எண்ணெயின் போக்கு மற்றும் பொருளாதார நெருக்கடியை மிகவும் நெருக்கமாக் கவனித்து வருவதாக அது தெரிவித்துள்ளது.

Comments