அமெரிக்காவின் புளோரிடா நீதிமன்றம், கியூபாவின் முன்னாள் புரட்சித் தலைவரான ரவுல் காஸ்ட்ரோ மீது கொலைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது U.S. indicts Cuba's Raúl Castro in latest escalation of tensions. கடந்த 1996 ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த கியூபா அகதிகள் குழுவின் இரண்டு சிவில் விமானங்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த நடவடிக்கைக்கு கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கானல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் Raul Castro are a "political maneuver" with no legal basis whatsoever. இது எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் இல்லாத, முற்றிலும் கியூப அரசை அச்சுறுத்துவதற்காக அமெரிக்கா மேற்கொண்டுள்ள ஒரு "அரசியல் சூழ்ச்சி" என்று அவர் கூறியுள்ளார். அந்த விமானங்கள் தங்கள் நாட்டின் வான் எல்லையை மீறியதாக கியூபா தரப்பு கூறுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் இல்லாததால், இந்த வழக்கின் காரணமாக ரவுல் காஸ்ட்ரோ கைது செய்யப்பட வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் கியூபா மற்றும் அமெரிக்கா இடையேயான அரசியல் பதற்றத்தை இந்த விவகாரம் மேலும் அதிகரித்துள்ளது.