Offline
Menu
இனி எல்லா படங்களுக்கும்.. ஜனநாயகன் ரீலீஸுக்கு முன் முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பு
By Administrator
Published on 05/26/2026 12:00
News

சினிமா துறை மோசமான நிலையில் இருப்பதாகவும், அதற்காக சில முக்கிய விஷயங்களை செய்ய வேண்டும் என முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் விஜய்யிடம் சினிமா துறையினர் பலரும் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து இருந்தனர்.

அரசு டிக்கெட் புக்கிங் தளம் தொடங்க வேண்டும், ஓடிடி தளம் தொடங்க வேண்டும், உள்ளூர் கேளிக்கை வரி ரத்து செய்ய வேண்டும், டிக்கெட் விலை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

சிறப்பு காட்சி

இந்நிலையில் புது படங்களுக்கு சிறப்பு காட்சிகள் அனுமதிப்பது தொடர்பாக முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இனி படம் வெளியாகி ஏழு நாட்கள் வரை ஒரு நாளுக்கு 5 காட்சிகள் போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா துறையினர் தற்போது மகிழ்ச்சி தெரிவித்து இருக்கின்றனர்.

சிறப்பு காட்சிக்கு அனுமதி வாங்குவதே முந்தைய ஆட்சியில் போராட்டமாக இருந்ததாகவும் பலரும் கூறி இருக்கின்றனர். 

Comments