Offline
Menu
கேஎல்ஐஏ டெர்மினல் 1 ஏரோட்ரெயின் சேவை நாளை முதல் மீண்டும் முழுமையாக இயங்கும் அமைச்சர் லோக்
By Administrator
Published on 06/01/2026 08:00
News

கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையம் டெர்மினல் 1-இல் உள்ள ஏரோட்ரெயின் (Aerotrain) சேவை, வரும் நாளை முதல் ஜூன் 1 நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் 24 மணி நேரமும் முழுமையாகச் செயல்படும் என்பதை போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி லோக் கூறினார். நிலப் பொதுப் போக்குவரத்து முகமையுடன் (APAD) ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு, சுயாதீன இரயில்வே மதிப்பீட்டாளர்களால் சரிபார்க்கப்பட்ட ‘விரிவான செயல்பாட்டுத் திட்டம்’ (CAP) வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அறிக்கையின் வாயிலாக என்று அவர் தெரிவித்துள்ளார்.

​ கடந்த 2025 நவம்பர் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விரிவான செயல்பாட்டுத் திட்டம், மூன்று முறையான கட்டங்களை உள்ளடக்கியிருந்தது:

• ​ஆய்வு மற்றும் சீரமைப்புப் பணிகள்

• ​அமைப்பு சோதனை மற்றும் சரிபார்ப்பு

• ​சோதனை ஓட்டங்கள்

​பயணிகள் உள்ள, பயணிகள் இல்லாத இருவேறு சூழல்களின் கீழ், 24 மணி நேரம், 48 மணி நேர கால அளவுகளில் இந்தத் தாங்குதிறன் சோதனைகள் நடத்தப்பட்டன என அவர் குறிப்பிட்டார். கடந்த 2026 ஜனவரி முதல், ஏரோட்ரெயின் சேவை 100% தடையற்ற செயல்பாட்டுத் திறனைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், வழக்கமான ஆய்வு,பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தினசரி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான பொறியியல் நேரங்கள் தொடர்ந்து, பராமரிக்கப்படும் என்று அமைச்சர் லோக் தெரிவித்தார்.

இந்த பராமரிப்பு நேரங்களின் போது, பயணிகளுக்குச் சேவையாற்ற ஒரு தனி இரயில் தொடர்ந்து இயக்கப்படும். ​ஏரோட்ரெயினின் செயல்பாடுகள் மீதான ஒழுங்குமுறை மேற்பார்வையை போக்குவரத்து அமைச்சு, தரைப் போக்குவரத்து நிறுவனம் (APAD) முகமையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கும். அதே வேளையில், இந்தத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட சேவைத் தரங்களைப் பராமரிப்பதற்கு மலேசியா ஏர்போர்ட்ஸ் (Malaysia Airports) தொடர்ந்து பொறுப்பேற்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments