Offline
Menu
மியான்மரியில் பயங்கர வெடிவிபத்து – 45 பேர் பலி
By Administrator
Published on 06/02/2026 08:00
News

நைரோபி, இந்தியா அருகே அமைந்துள்ள நாடு மியான்மர். இந்நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் ஷஹன் மாகாணம் நாம்காம் நகரில் கங்ட்அப் என்ற கிராமம் அமைந்துள்ளது. சீன எல்லையில் அமைந்துள்ள இந்த பகுதி உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் சுரங்கப்பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

வெடி விபத்து

அந்த வெடிபொருட்கள் இன்று திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டிடம், அதன் அருகே இருந்த குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.

இந்த வெடி விபத்தில் குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். மேலும், 70 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனை அனுமதித்தனர். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments