Offline
Menu
கையெழுத்தான எல்&டி விரிவாக்கத் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல் – சரிபார்ப்பகம் விளக்கம்
By Administrator
Published on 06/07/2026 08:00
News

சென்னை, தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் கையெழுத்தான எல்&டி (L&T) விரிவாக்கத் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்

பரவும் செய்தி

ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரண்டு L&T திட்டங்களின் விரிவாக்கத்தைப் புதிய திட்டங்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாகத் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவல்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் ரூ.18,600 கோடி முதலீட்டில் லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனத்தின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 04.06.2026 அன்று மேற்கொள்ளப்பட்டது.

இதில் காஞ்சிபுரம் தகவல் தரவு மையமும், திருவள்ளூர் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும்தளமும் விரிவாக்கத் திட்டங்கள் என்றே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை புதிய திட்டங்கள் என்று தமிழ்நாடு அரசு குறிப்பிடவே இல்லை.

தவறான தகவலைப் பரப்பாதீர்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments