இந்திய சமூகத்தின் நலனை மேம்படுத்தும் நோக்கில், மித்ரா அமைப்பு தங்களின் இரண்டு முக்கிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களைத் தொடங்கியுள்ளது. ஆரோக்கியா மடானி 2026 டயாலிசிஸ் உதவித் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு ஐந்தாயிரம் ரிங்கிட் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. பி40 மற்றும் எம்40 வருமானக் குழுவைச் சேர்ந்த இந்தியர்களை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டத்தில், பி40 குழுவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மொத்தம் 1,300 பேர் பயனடையும் இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 4, 2026 அன்று மூடப்படும். இதற்கிணையாக, 2026-ஆம் ஆண்டிற்கான கல்வி மடானி – கல்வி உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தேர்வுகளுக்குத் தயாராகும் 5,000 இந்திய பி40 மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்வி மடானி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூன் 19, 2026 அன்று மூடப்படும்.
மேற்கண்ட இரண்டு திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தகுடியுடையவர்கள், மித்ராவின் www.mitra.gov.my எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவங்களையும் வழிகாட்டுதல்களையும் அணுகலாம். மேலும், இந்தத் திட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு மித்ராவின் முகநூல் (MITRA Kesuma)) பக்கத்தைப் பார்வையிடவும்.
ஆரோக்கியா மடானி திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு 03-8886 6239 அல்லது 6221 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது sks@mitra.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். கல்வி மடானி திட்டம் தொடர்பான மேலதிகத் தகவல்களுக்கு 03-8886 6192 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அல்லது spl@mitra.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
இந்த இரண்டு திட்டங்கள் தொடர்பான கூடுதல் விவரங்கள் முறையே இங்கு இணைக்கப்பட்டுள்ள உள்ள சுவரொட்டிகளில் கொடுக்கப்பட்டுள்ளன. மலேசிய இந்தியர் சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த மே 29-ஆம் தேதி மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்த புதிய முன்னெடுப்புகளை அறிவித்தார்.