Offline
Menu
நாக சைதன்யாவின் “தூதா சீசன் 2 ” வெப்தொடரின் படப்பிடிப்பு தொடக்கம்
By Administrator
Published on 06/07/2026 12:00
Entertainment

இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் 2023ல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘தூதா’ வெப்தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த தொடரில் முன்னணி நடிகர் நாக சைதன்யா தனது அசாத்திய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.

இந்தத் தொடரில் நாக சைதன்யாவுடன் பார்வதி திருவோத்து, ஸ்ரீகாந்த் முரளி, பராச்சி தேசாய், அனீஷ் குருவில்லா, தருண் பாஸ்கர், ரோஹிணி, பிரியா பவானி ஷங்கர், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடருக்குக் கிடைத்த நல்ல வரவேற்பினைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் எடுக்கப்படவிருக்கிறது.

இந்தப் பூஜையில் நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா தொடக்கி வைத்தார். இந்தத் தொடரின் நாகார்ஜுனா, மற்றும் நார்த்ஸ்டார் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக ஷரத் மரார் தயாரிக்கிறார்கள். இந்த விழாவில் நாகார்ஜுனா, பார்வதி, பவானி ஷங்கர், நாகசைதன்யா மற்றும் படக்குழுவினர் சிலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், நாக சைதன்யா நடிப்பில் உருவாகும் ‘தூதா சீசன் 2’ வெப்தொடரின் படப்பிடிப்பு தொடங்கியதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவான இதன் முதல் பாகம், எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபத்துக்கள் மற்றும் விசித்திரமான மரணங்களை முன்கூட்டியே அச்சிட்டு வரும் ஒரு மர்மமான செய்தித்தாளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்போ இதன் இரண்டாம் பாகமும் அதைவிட பல மடங்கு மிரட்டலான மற்றும் விறுவிறுப்பான திருப்பங்களுடன் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments