Offline
Menu

LATEST NEWS

நைஜீரியா: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 360 பேரை மீட்ட ராணுவம்
By Administrator
Published on 06/09/2026 08:00
News

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சி குழுக்கள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை இந்த பயங்கரவாத கும்பல்கள் கடத்தி வருகின்றன.

360 பேர் மீட்பு

இதனிடையே, இந்த ஆண்டு தொடக்கத்தில் நைஜீரியாவின் பொர்னோ மாகாணத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் பொதுமக்கள் 360 பேரை கடத்தி சென்றனர். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பொதுமக்களை பாதுகாப்புப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பொதுமக்கள் 360 பேரை ராணுவம் நேற்று அதிரடியாக மீட்டுள்ளது. கடத்தப்பட்ட பொதுமக்கள் பொர்னோ மாகாணத்தில் உள்ள மண்டரா மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

Comments

More news