Offline
Menu

LATEST NEWS

போதைப்பொருள் ஒழிப்பு: 15 தமிழக போலிஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள்; தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
By Administrator
Published on 06/27/2026 09:00
News

அனைத்துலக போதைப்பொருள் ஒழிப்பு நாளை முன்னிட்டு, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகச் செயல்பட்ட 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய், ‘முதலமைச்சரின் காவல் பதக்கங்களை’ அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளார்.

இந்த உயரிய விருதுக்குக் கடலூர் மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா, ராமநாதபுரம் எஸ்பி ஜி. சந்தீஷ், சென்னை கூடுதல் எஸ்பி ஸ்ரீ லட்சுமணன் மற்றும் உதவி ஆணையர் மனோஜ் குமார் உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் திருச்சி, கோவை, தேனி, நாகை, புதுக்கோட்டை, திருப்பூர், நெல்லை, கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான மாநில அரசின் தீவிர நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பதக்கங்கள், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் நாட்டின் சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் விஜய்யால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments