Offline
Menu
ரஷியா மீது மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்
By Administrator
Published on 06/28/2026 18:33
News

கீவ், ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,583வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டிரோன் தாக்குதல்

இந்நிலையில், ரஷியா மீது உக்ரைன் இன்று மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. ரஷியாவின் 12 மாகாணங்கள் மீது 660 டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன்கள் ரஷிய வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் உயிரிழப்பு போன்ற பாதிப்பு ஏற்படவில்லை என்று ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments