Offline
Menu
சிறப்பாக பணியாற்றிய கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கிய முதல் அமைச்சர் விஜய்
By Administrator
Published on 07/02/2026 08:00
News

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் 29.6.2026 மற்றும் 30.6.2026 ஆகிய இரண்டு நாட்கள் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், கலெக்டர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டின் முதல் நாளான 29.6.2026 அன்று முற்பகல் நடைபெற்ற கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் தொடக்க உரையுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று (30.6.2026) தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் முற்பகலில் காவல்துறை அதிகாரிகள் மாநாடும், பிற்பகலில் கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடும் நடைபெற்றது. இம்மாநாடு நடைபெற்ற இரண்டு நாட்களிலும் தமிழ்நாடு முதல்-அமைச்சர், கலெக்டர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிகள். சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென்றும், உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றி மக்களுக்கு பாரபட்சமற்ற, துரிதமான சேவையாற்ற வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்கள்.

சிறந்த மாவட்ட ஆட்சியர்

இம்மாநாட்டின் நிறைவாக, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் பணியாற்றியமைக்காக மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பாகப் 2024-25ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை முன்னாள் திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, ஐ.ஏ.எஸ்., முன்னாள் திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், ஐ.ஏ.எஸ்., முன்னாள் புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா, ஐ.ஏ.எஸ்., ஆகியோருக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தை திறம்படச் செயல்படுத்தியமைக்காக 2023-ஆம் ஆண்டிற்கான விருதுகளை முன்னாள் சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித், ஐ.ஏ.எஸ்., , முன்னாள் கன்னியாகுமரி கலெக்டர் ஸ்ரீதர், ஐ.ஏ.எஸ்., ஆகியோருக்கும்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக 2024-ஆம் ஆண்டிற்கான விருதினை முன்னாள் விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கும். 2025-ஆம் ஆண்டிற்கான விருதுகளை முன்னாள் தருமபுரி கலெக்டர் சாந்தி, ஐ.ஏ.எஸ்., முன்னாள் இராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா, ஐ.ஏ.எஸ்., முன்னாள் தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா, ஐ.ஏ.எஸ்., ஆகியோருக்கும்; பொதுத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் குறைதீர்ப்புப் பிரிவின் கீழ் வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டமைக்காக 2025-26ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதினை முன்னாள் கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா, ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கும் வழங்கினார்.

Comments