Offline
Menu
மலேசிய ஃபில்ஹார்மோனிக் ஆர்செஸ்ட்ராவின் ‘சிம்போனிக் கிப்லி II’ இசைத் திருவிழா!
By Administrator
Published on 07/08/2026 11:00
Entertainment

(Studio Ghibli) அனிமேஷன் திரைப்படங்களின் உலகப் புகழ்பெற்ற பின்னணி இசையை நேரலையாகக் கேட்டு ரசிக்கும் அரிய வாய்ப்பை மலேசிய ஃபில்ஹார்மோனிக் ஆர்செஸ்ட்ரா (MPO) இந்த ஜூலை மாதத்தில் வழங்குகிறது. கோலாலம்பூர், கேஎல்சிசியில் உள்ள பெட்ரோனாஸ் ஃபில்ஹார்மோனிக் ஹாலில் (DFP) ஜூலை 2 முதல் ஜூலை 12 வரை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த 'சிம்போனிக் கிப்லி II' (Symphonic Ghibli II) பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியைப் புகழ்பெற்ற நடத்துனர் ஜெரார்ட் சலோங்கா தலைமை தாங்கி நடத்துகிறார்.

புகழ்பெற்ற ஜப்பானிய இசையமைப்பாளர் ஜோ ஹிசைஷியின் (Joe Hisaishi) அசாத்திய கற்பனையில் உருவான Spirited Away, My Neighbour Totoro, Kiki's Delivery Service மற்றும் Howl's Moving Castle போன்ற எக்காலத்துமே அழியாத காவியத் திரைப்படங்களின் ஆன்மாவைத் தொடும் மெல்லிசைகள், பிரம்மாண்ட ஆர்கெஸ்ட்ரா கருவிகளின் ஒத்திசைவோடு மேடையில் மறுவடிவம் பெறுகின்றன. அனிமேஷன் திரையைக் கடந்து, இசையின் தூய்மையான வடிவத்தை மட்டுமே பிரதானப்படுத்தி நடத்தப்படும் இந்த சர்வதேச அளவிலான இசைத் திருவிழா, மலேசிய இசை மற்றும் சினிமா ரசிகர்களிடையே தற்போது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இடம்: Dewan Filharmonik PETRONAS (DFP), KLCC.

திகதிகள்: 2 ஜூலை முதல் 12 ஜூலை 2026 வரை

Comments