மந்திரி பைரதி சுரேஷ், பொதுமக்களின் குறைகளை அறிய பெங்களூருவில் உள்ள அரசு பேருந்து ஒன்றில் திடீரென மாறுவேடத்தில் ஏறி அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அப்போது பேருந்தில் டிக்கெட் எடுத்த மந்திரியிடம், சில்லறை இல்லை என்ற காரணத்தைக் கூறி அவர் மந்திரி என்றே தெரியாமல் நடத்துனர் அவரை பேருந்தை விட்டு கீழே இறக்கிவிட்டுள்ளார். அதேபோல, மற்றொரு அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்காகப் பேருந்தை நிறுத்தாமல் அலட்சியமாகச் சென்றுள்ளார்.