Offline
Menu
9 வயது சிறுவன் உட்பட மூவர் மாயமான சம்பவம்
By Administrator
Published on 08/06/2026 15:00
News

‘கூட்டுப் பணம்’ தகராறு காரணமா? – காவல் துறை சந்தேகம்!

கெடா, புக்கிட் காயூ ஹித்தாம், தாமான் பாயான்மாஸ் பகுதியில் கடந்த ஜூலை 20 முதல் தாய், தந்தை மற்றும் அவர்களின் 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயமான சம்பவத்தின் பின்னணியில், ‘சீட்டுப் பணம்’ அல்லது ‘கூட்டுப் பணம்’ (Kutu Money) கொடுக்கல் வாங்கல் தகராறு இருக்கலாம் எனக் காவல் துறை சந்தேகிக்கிறது.

இத்தகவலைக் குபாங் பாசு மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரண்டன்ட் முகமது ராட்ஸி அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.

மாயமான குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக வெளிநாடுகளுக்குச் சென்றதற்கான எவ்விதக் குடிநுழைவுப் பதிவுகளும் இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே, இந்த வழக்கு ‘காணாமல் போன நபர்கள்’ என்ற கோணத்திலேயே தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

காணாமல்போன மூவர் குறித்தோ அல்லது அவர்களின் நடமாட்டம் குறித்தோ ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது குபாங் பாசு மாவட்டக் காவல் தலைமையகத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments