Offline
Menu
IJNஇல் அனுமதிக்கப்பட்டிருக்கும் இஸ்மாயில் சப்ரி மீது இன்று குற்றஞ்சாட்டப்படும்
By Administrator
Published on 08/08/2026 13:00
News

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது இன்று காலை தேசிய இதய நிறுவனத்தில் (IJN) மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் (MACC) கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரா நாடாளுமன்ற உறுப்பினரான அவர் மீதான குற்றச்சாட்டு, IJN-ல் நீதிபதி சுசானா ஹுசைன் முன்னிலையில் விசாரிக்கப்படும்.

இஸ்மாயிலின் வழக்கறிஞர் ரகுநாத் கேசவன், தனது கட்சிக்காரர் நேற்று IJN-ல் அனுமதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். இஸ்மாயிலின் வாக்குமூலத்தை அந்த நிறுவனத்தில் பதிவு செய்ய அரசுத் தரப்பு விண்ணப்பிக்கும் என்றும் அவர் கூறினார். இந்த வழக்கு, இஸ்மாயிலின் சொத்து விவரங்கள் தொடர்பானது எனக் கூறப்படுகிறது.

அவர் இதற்கு முன்னர் ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் இருந்த அவர்  கடந்த ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) பல கட்ட விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டார்.

நான்கு நபர்களின் இல்லங்கள் மற்றும் “பாதுகாப்பான வீடுகள்” என்று நம்பப்படும் மேலும் மூன்று வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட, சுமார் RM170 மில்லியன் ரொக்கப் பணம் மற்றும் பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 16 கிலோ தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வந்தது.

ஆகஸ்ட் 2021 முதல் நவம்பர் 2022 வரை இஸ்மாயில் பிரதமராக இருந்த காலத்தில், Keluarga Malaysiaவின் முன்முயற்சியின் கீழ் விளம்பர மற்றும் பிரச்சார நடவடிக்கைகளுக்காக நிதி செலவினம் மற்றும் கொள்முதல் செய்யப்பட்டதுடன் இந்த விசாரணை தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இந்த ஊழல் தடுப்பு அமைப்பு தனது விசாரணையை ஜூன் 2025-ல் நிறைவு செய்தது.

Comments