Offline
Menu
தைவானில் பண மோசடி வழக்கில் 3 மலேசியர்கள் கைது
By Administrator
Published on 08/12/2026 14:00
News

தைவானின் கௌஷியூங் நகரில், மோசடிக் கும்பல்களுக்கு இடைத்தரகர்களாகச் செயல்பட்டு ATM அட்டைகள் மூலம் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக 3 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளாக தைவானுக்குள் நுழைந்த 18, 26 மற்றும் 39 வயதுடைய இம்மலேசியர்கள் மூவரும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாகக் கைது செய்யப்பட்டதாகத் தைவானின் Focus Taiwan ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தபால் நிலைய ATM மையத்தில் ரொக்கப் பணம் பெற்றுக்கொண்டிருந்த 39 வயது நபரிடமிருந்து NT$155,000 (தோராயமாக RM19,660) ரொக்கம், 2 வங்கி அட்டைகள் மற்றும் ஒரு கைபேசி கைப்பற்றப்பட்டன.

மற்றொரு தபால் நிலைய ATM பகுதியில் கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞரிடமிருந்து NT$60,000 (தோராயமாக RM7,610) ரொக்கம், ஒரு வங்கி அட்டை மற்றும் ஒரு கைபேசி பறிமுதல் செய்யப்பட்டன. 26 வயது நபரை, குடிநுழைவுத்துறை மற்றும் விமானப் போக்குவரத்து காவல் துறையின் உதவியுடன் கௌஷியூங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் பிடித்தனர். அவரிடமிருந்து NT$2,800 ரொக்கமும் 2 கைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் சாஷியாடோ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளதால் தொடர்ந்து காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மோசடிக் கும்பல்கள் வெளிநாட்டினரைச் சுற்றுலா விசா மூலம் குறுகிய காலத்திற்குத் தைவானுக்கு அழைத்து வந்து, இதுபோன்று ATM-களில் பணம் எடுக்க வைத்துவிட்டு, ஒரு வாரத்திற்குள் அவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பும் புதிய உத்தியைப் பயன்படுத்தி வருவதாகத் தைவான் காவல் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments