Offline
Menu
செகிஞ்சானில் இழுவை லோரி மீது கார் மோதி விபத்து: 59 வயது பெண் படுகாயம்!
By Administrator
Published on 08/14/2026 17:00
News

சிலாங்கூர், செகிஞ்சானில் இழுவை லோரி (Tow Truck) ஒன்றின் பின்புறத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 59 வயது பெண் ஒருவர் காயமடைந்தார்.

இன்று மாலை 4:48 மணியளவில், கிள்ளான் நோக்கிச் செல்லும் சாலையில் உள்ள ‘தாலி ஆயிர் 8’ (Tali Air 8) பகுதியில், பெட்ரோல் நிலையம் ஒன்றின் எதிரே இவ்விபத்து நிகழ்ந்ததாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

மாலை 5:01 மணிக்குச் சம்பவ இடத்திற்குச் சென்ற செகிஞ்சான் தீயணைப்பு நிலைய வீரர்கள், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்ணைப் போராடி மீட்டனர்.

இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 59 வயது பெண்ணின் கையில் காயம் ஏற்பட்டது. மீட்பக்குப் பின் அவர் உடனடி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இம்மீட்பு நடவடிக்கையில் 6 தீயணைப்பு வீரர்கள், ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் ஓர் அவசர மருத்துவ மீட்புச் சேவை (EMRS) வாகனம் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.

Comments