ஆகஸ்ட் 26 முதல் 31 வரை நாடு தழுவிய அளவில் பாதிப்பு!
புதிய தலைமுறை மைக்காட் (New-Generation MyKad) அறிமுகப்படுத்தப்பட உள்ளதைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் உள்ள மைக்காட் அச்சிடும் சேவைகள் நாளை (ஆகஸ்ட் 26) முதல் ஆகஸ்ட் 31 வரை தற்காலிகப் பாதிப்பைச் சந்திக்கும் எனத் தேசியப் பதிவுத் துறை (JPN) அறிவித்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய மைக்காட் கட்டமைப்பில் இருந்து, புதிய தலைமுறை அடையாள அட்டைக்கு மாறும் பணிகளைத் தேசியப் பதிவுத் துறை மேற்கொண்டு வருகிறது.
அவசரத் தேவைகள் இல்லாத பொதுமக்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் தங்களது மைக்காட்டை மாற்றுவதையோ அல்லது புதுப்பிப்பதையோ தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1முதன்முறையாக மைக்காட் விண்ணப்பிக்கும் 12 வயதுச் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர்கள், விரைவில் புதிய தலைமுறை மைக்காட் உற்பத்தி தொடங்கவுள்ளதால் சில நாட்கள் காத்திருந்து விண்ணப்பிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த மாற்றத்தின் போது பொதுமக்கள் காட்டும் பொறுமைக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்துள்ள தேசியப் பதிவுத் துறை, இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளது.