Offline
Menu
கூலிமில் திறந்தவெளி சாக்கடையில் விழுந்து 4 சிறுவர்கள் பலி!
By Administrator
Published on 09/16/2026 16:00
News

கெடா, கூலிம் பகுதியில் உள்ள தாமான் தெசா காயாங்கான் எனும் இடத்தில் திறந்தவெளி சாக்கடையில் விழுந்து 4 சிறுவர்கள் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

 

8 முதல் 12 வயதுக்குட்பட்ட அந்தச் சிறுவர்கள் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, பந்து அருகில் இருந்த சாக்கடையில் விழுந்துள்ளது. பந்தை எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக நான்கு சிறுவர்களும் சாக்கடைக்குள் விழுந்துள்ளனர்.

 

நேற்று இரவு இரு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற இரு சிறுவர்கள் கூலிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

 

உயிரிழந்த நான்கு சிறுவர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு (HSB) கொண்டு செல்லப்படுவதாக குலிம் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டண்டன் ஷாம்சூல் சின்ரிங் தெரிவித்துள்ளார்.

Comments