Offline
Menu
சூடான்: தங்கச்சுரங்கம் இடிந்து விபத்து – 60 பேர் பலி
By Administrator
Published on 09/18/2026 14:00
News

கார்டூமின், சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். இந்நாட்டில் பல்வேறு தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலானவை சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன.

 

தங்கச்சுரங்கம் விபத்து – 60 பேர் பலி

இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு கார்டோபான் மாகாணம் எல் நஹொட் நகரில் அல் சாரா என்ற தங்கச்சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த தங்க சுரங்கத்தில் இன்று 62 பேர் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்க சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

 

இந்த சுரங்க விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். மேலும், சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 60 பேரின் உடல்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments