நியூயார்க் இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த பல மாதங்களாக கடுமையான வரிகளை விதித்து வருகிறார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல அதிரடி உத்தரவுகளை வெளியிட்டார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தினார். அமெரிக்காவை வளம் நிறைந்த நாடாக மாற்றுவேன் என உறுதி பூண்டார். இதற்காக பல நாடுகளுக்கு வரிகளை விதித்து அமல்படுத்தினார்.
இதனால், அமெரிக்காவின் கஜானா நிரம்பி வருகிறது என சக உறுப்பினர்களிடம் கூட்டமொன்றில் பெருமையாக பேசினார். இதில், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவுக்கு எதிராக பல மாதங்களாக அவர் கடுமையான வரிகளை விதித்து வருகிறார். சமீபத்தில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வாங்க கூடிய இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக கடுமையான வரிகளை விதிப்பதற்கான சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
கடந்த காலத்தில் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்த வரி தொடர்பான தகவல் தொகுப்பை காண்போம்.
துறை சார்ந்த வரிகள்:
இது தவிர, துறை சார்ந்த வரிகளும் உள்ளன. இதன்படி, எக்கு மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு 50 சதவீதம், வாகன உதிரிபாகங்களுக்கு 25 சதவீதம் வரிகள் இருக்கும்.
எனினும், ஸ்மார்ட்போன்கள், மருந்துகள் மற்றும் எரிசக்தி பொருட்கள் ஆகியவற்றிற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் அல்லது பரஸ்பர வரி:
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒரு சட்டைக்கு அமெரிக்காவில், மிகவும் விரும்பப்படும் நாடுகளுக்கான 5 சதவீத வரி விதிக்கப்பட்டால், தற்போது அதற்கான மொத்த வரி என்பது 5 சதவீதம் மற்றும் கூடுதல் 10 சதவீதம் (பிரிவு 301-ன் கீழ் விதிக்கப்பட்டது) ஆகியவற்றின் கூட்டுத்தொகையாக இருக்கும். இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது, இதுபோன்ற வரி விதிப்புகளால் தன்னுடைய நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் முயற்சிகளில் அமெரிக்க அரசு ஈடுபட்டு வருவது தெரிகிறது.