Offline
Menu
கின்னஸ் சாதனை படைத்த அல்லு அர்ஜுனின் “ராக்கா” படம்
By Administrator
Published on 09/25/2026 14:00
Entertainment

ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் உலக சாதனையை ‘ராக்கா’ படம் படைத்திருக்கிறது.

 

அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் ‘ராக்கா’. பான்-இந்தியா படமாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

முன்னணி நடிகைகள் பட்டாளம்

இப்படத்தில் ஏற்கனவே தீபிகா படுகோன் இணைந்துள்ள நிலையில், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் மற்றும் ஜான்வி கபூர், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட நடிகைகளும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சாய் அபயங்கர் இசையில் உருவாகி வரும் ‘ராக்கா’ படத்தின் தீம் பாடல் வெளியாகி வைரலானது.

 

இன்று அட்லீயின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ராக்கா’ படம் தொடர்பான சிறப்புத் தகவல் ஒன்றையும் படக்குழுவினர் பகிர்ந்திருக்கிறார்கள்

 

நேரலை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 37 நடிகர்களைக் கொண்டு இந்தப் படத்தின் ஒரு காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள்.

 

அதன் மூலம் ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் உலக சாதனையை இப்படம் படைத்திருக்கிறது.

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம், “வரலாறு படைக்கப்பட்டது. இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ஒரு சர்வதேச வெற்றி. ஒரே நேரத்தில் 37 கலைஞர்கள் படம்பிடிக்கப்பட்டதன் மூலம், “ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் செய்யப்பட்ட திரைப்படம்” என்ற கின்னஸ் உலக சாதனையை ராக்கா படைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை அடையாளம் காணும் வகையில், அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயும் கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.

Comments