Offline
Menu
இதுவரை RM9.25 மில்லியன் திரட்டப்பட்டது!
By Administrator
Published on 09/28/2026 18:00
News

டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக்கிற்கான அபராத நிதிக்காக இதுவரை RM9.25 மில்லியன் திரட்டப்பட்டது!

 

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக்கிற்காகத் தொடங்கப்பட்ட ஆதரவு நிதியத்தின் மூலம் இதுவரை RM9.25 மில்லியன் தொகையை அம்னோ திரட்டியுள்ளதாகக் கட்சியின் தேசியத் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமத் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மன்னிப்பு வாரியம் (Pardons Board) விதித்துள்ள RM50 மில்லியன் இலக்கை அடைவதற்கு இந்தத் தொகை இன்னும் போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

“இன்று காலை 10.00 மணி நிலவரப்படி, நாங்கள் இதுவரை RM9.25 மில்லியனைச் சேகரித்துள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட RM50 மில்லியன் இலக்கை அடைய இது இன்னும் போதாது. இதற்கான பொதுப் பணந்திரட்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மன்னிப்பு வாரியம் நிர்ணயித்த தொகையை எட்டுவதற்கு நமது தோழர்கள் விரைவில் உதவுவார்கள் என்று நம்புகிறோம். வீட்டுச் சிறை நடவடிக்கையை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு முன் இந்தத் தொகை செலுத்தப்பட வேண்டும்”
என்று, அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமத் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

 

இன்று (செப்டம்பர் 27) நடைபெற்ற மக்கள் சக்தி கட்சியின் 18-ஆவது ஆண்டறிக்கை பொது மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

 

நிபந்தனையுடனான பொது மன்னிப்பு முடிவைத் தொடர்ந்து, நஜிப் ரசாக் தனது எஞ்சிய சிறை தண்டனையை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுச் சிறையில் அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டது. எனினும், அதற்கு RM50 மில்லியன் அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்துவது உட்பட பல்வேறு விதிமுறைகளுக்கு அவர் உட்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments